உள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டில் கிக்பணியாளர்களை வலுப்படுத்த வஹன்.ai விரிவாக்கம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நீலகாலர் மற்றும் கிக்பணியாளர் ஆட்சேர்ப்பு தளம் வஹன்.ai, தமிழ்நாட்டில் தனது வலையத்தை வேகமாக விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் கிக்பணியாளர் படையில் 6.7% பங்குடைய தமிழ்நாடு, ஸ்விக்கி, செப்டோ, சொமெட்டோ, பிளிங்கிட், அமேசான் போன்ற தளங்களில் அதிகரித்து வரும் பணியாளர் தேவையின் முக்கிய மையமாக உள்ளது.தற்போது மாநிலத்தில் செயல்படும் 15 வஹன் லீடர்கள், மாதந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைவாய்ப்புகளுடன் இணைத்து ரூ.7-15 லட்சம் வரையிலான வருமானத்தைப் பெற்று வருகின்றனர். தென் தமிழ்நாட்டிலுள்ள ஒரு டயர்-2 நகரத்தில் புதிதாக இணைந்த லீடர் ஒருவர், இரண்டு மாதங்களில் மாநிலத்தின் முதல் 10 லீடர்களில் உயர்ந்து ரூ.7 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானம் ஈட்டியுள்ளார்.வஹன்.ai, சிறப்பாக செயல்படும் லீடர்களுக்கு மாருதி கிராண்ட் விடாரா, மஹிந்திரா தார், டாடா நெக்ஸான் போன்ற கார் பரிசுகளை வழங்கி அவர்களின் சாதனையை பாராட்டி வருகிறது.“ஏஐ மனிதர்களை மாற்றுவதற்கல்ல; அவர்களின் திறனை உயர்த்துவதற்கே,” என நிறுவனர் மற்றும் சி.இ.ஓ மதவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஏஐ மூலம் வாட்ஸாப் வழியாகவே எளிதான விண்ணப்ப செயல்முறை கிடைப்பதால், மாதந்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நீலகாலர் பணிகளில் சேருகின்றனர்.அடுத்த நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பை இரட்டிப்பாக்கவும், கூடுதலாக 200 புதிய வஹன் லீடர்களை இணைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்