நூற்றுக்கு நூறு பெற்றவர்கள்
இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கணிதத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு முதல் மூன்று இடங்களை பல மாணவர்கள் பிடித்திருந்தனர். அந்த வகையில், கணிதப் பாடத்தில் 12,532 மாணாக்கர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வெறும் 2,399 மாணாக்கர்களே நூறு மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் பாடததில் 3,677 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,310 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர். சமூக அறிவியல் பாடத்தில் இந்த ஆண்டு 756 (கடந்த ஆண்டு 467 பேர்) மாணாக்கர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.