உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பு

துபாய் நாட்டில் பணியாற்ற தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை: துபாய் நாட்டில் உள்ள ஒரு முன்னனி நிறுவனத்துக்கு, இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், பி.இ., எலெக்ட்ரிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்ற இன்ஜினியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும், மூன்றாண்டு அனுபவத்துடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பிளம்பிங், எலெக்ட்ரானிக்ஸ், ஹெச்.வி.ஏ.சி., எம்.இ.பி., மேற்பார்வையாளர்கள், பிம்எஸ் ஆபரேட்டர்கள், ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற எலெக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், செண்ட்ரிங் கார்பெண்டர்கள், ஏசி டெக்னீசியன்கள், கொத்தனார்கள் மற்றும் பெயிண்டர்கள் தேவைப்படுகிறார்கள். ஐ.டி.ஐ., படிப்பு இல்லாதவர்கள் அரபு நாடுகளில் இரண்டாண்டு பணி அனுபவம் இருந்தால் போதுமானது. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, பணி அனுபவம் ஆகியவற்றின் நகல்கள், ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட நான்கு ஃபோட்டோக்களுடன், எண் 48 டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு, சென்னை- 20 என்கிற முகவரியில் அமைந்துள்ள, தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில், 4ம் தேதி திங்கள் காலை 10 மணிக்கு நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம். மேலும் விபரம் அறிய இந்நிறுவனத்தின் இணைய தள முகவரி அல்லது 044-24464268, 24464269 ஆகிய ஃபோன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்