மாணவிகளுக்கு கட்டண சலுகை
வரும் 2012 கல்வி ஆண்டு முதல் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் மாணவிகளுக்கு விதிக்கப்படாது என ஐ.ஐ.டி., நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகளவிலான மாணவிகள் இந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் விதமாக, இந்த கட்டண சலுகை வழங்கப்படுவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இனி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் இத்தேர்வில் பங்கேற்கும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என நம்பப்படுகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், மாணவர்களுக்கு வழக்கமான விண்ணப்பக்கட்டணம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் இளநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் "ஐ.ஐ.டி., ஜே.இ.இ.,&' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 10 ஆயிரம் இடங்களுக்கு 80 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வை ஆண்டு தோறும் எழுதுகின்றனர்.