உள்ளூர் செய்திகள்

தலைசிறந்த ஹார்வர்டு பல்கலை

இதைப்பற்றிய அலசலுக்கு முன், ஹார்வர்டு பல்கலை பற்றிச் சிறு குறிப்பு. நடப்பாண்டில் தனது 375வது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஹார்வர்டு பல்கலை 1636ல் கட்டப்பட்டது. கல்லுõரியின் முதல் புரவலரான ஜான் ஹார்வர்டு என்ற இளம் அமைச்சரின் நினைவாக ஹார்வர்டு எனப் பெயர்சூட்டப்படது. அவர் தன் நிலத்தில் பாதியும், நுõலகத்தையும் கல்லுõரிக்கு தானமாக வழங்கி இருக்கிறார். இங்கு 12 ஆயிரத்து100க்கும் அதிகமான பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 21,000 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 14,500 பேர் தொழிற்கல்வி பயில்பவர்கள். மூன்று லட்சத்து 23 ஆயிரம் பேர் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இதில், ஐக்கிய அமெரிக்கா அல்லாத 201 நாடுகளைச் சேர்ந்த 52 ஆயிரம் பேரும் அடக்கம். 4,979 ஏக்கர் பரப்பில் 11 முதன்மை கல்வி நிறுவனங்கள், ராட்கிளிப் கல்வி நிறுவனம், வெளிநாட்டு கல்விப்பிரிவு என பல்வேறு கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி உள்ளது.கலை மற்றும் அறிவியல், பிஸ்கூல், மருத்துவம், சட்டம், நிதி, பொறியியல், ஆன்மிகம், வடிவமைப்பு, கல்வி, தத்துவம், சூழலியல், என பெரும்பாலும் அனைத்துத் துறை தொடர்பாகவும் கல்வி பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகமான இங்குள்ள நூலகத்தில் ஒரு கோடியே 62  லட்சம் புத்தகங்கள் உள்ளன. உலகின் மூன்றாவது பெரிய நுõலகம் இதுதான். கல்விக்கட்டணம் இந்திய மதிப்பில் கொஞ்சம் அதிகம்தான். இளநிலைப்பட்டத்திற்கு ஆண்டுக்கு 34 ஆயிரத்து 976 டாலர்கள்(ஏறக்குறைய 17.5 லட்சம் ரூபாய்) கல்விக்கட்டணமாகவும், மொத்தம் 25 லட்சம் ரூபாய் வரையும் செலவாகிறது. கல்வி நிதிஉதவியாக 41 ஆயிரத்து 300 டாலர்கள் வரை வழங்கப்படுகிறது. கற்பித்தல் நடைமுறைகளும், உள்கட்டமைப்பு வசதிகளும்: பிஸ்கூல் பேராசிரியர்கள் உலகின் முன்னணி பிசினஸ்மேன்கள், வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். வணிகத்தின் புதிய வழிமுறைகள், விதிகள் தொடர்பாக ஆண்டுக்கு 350 திட்டக்கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. 300 ஆய்வுக்கட்டுரைகள், 35 புத்தகங்கள் எழுதப்படுகின்றன. உலகின் மற்ற பிஸ்கூல்களின் 80 சதவீத பாடத்திட்டம், ஹார்வர்டு பிஸ்கூலால் நடைமுறைப்படுத்தப்படுவதுதான். ஆராய்ச்சிக்காக அதிகளவு செலவு செய்யப்படுகிறது. பிஸ்கூலில் மட்டும் ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் 5,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பல்கலையில் 45 ஏக்கர் பரப்பில்தான் பிஸ்கூல் அமைந்திருக்கிறது எனில், ஒவ்வொரு துறையின் உள்கட்டமைப்பையும், ஆராய்ச்சிக்காகவும் ஒதுக்கும் தொகையையும் அறிந்து கொள்ளலாம். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் புதிய நடைமுறைகள் உடனுக்குடன் பாடத்திட்டங்களாக அறிமுகம் செய்யப்படுகின்றன. அறிவியல் துறையின் மிகச்சமீபத்திய கண்டுபிடிப்போ, ஆராய்ச்சியோ எதுவாக இருப்பினும், அதுதொடர்பாக நடப்புக் கல்வியாண்டிலேயே கற்றல் அல்லது ஆய்வு செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வகுப்புகளில் 10 மாணவர்களுக்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். இதன்மூலம் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே நெருங்கிய புரிதல் ஏற்படுகிறது. வகுப்பு வேளைக்கு முன்னும், பின்னும் எப்போது வேண்டுமானாலும் தனது ஆசிரியரை மாணவன் சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். பெரும்பாலும் ஆங்கிலம் தவிர்த்த வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியைக் கற்றுக் கொள்ள மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்; சில சமயங்களில் அது கட்டாயமும் கூட. தேவைப்பட்டால் இரண்டாமாண்டு மாணவன் தொடர்புடைய பாடத்தை வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துறைசார்ந்த வேறு பாடங்களை இணைப்பாடமாகவோ, கூடுதல் பாடமாகவே எடுத்துப் படிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இதர கூடுதல் திறன்கள், சமூக விழிப்புணர்வு, விளையாட்டு, கலை, கலாசாரம் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவது கட்டாயம். வேறு கல்வி நிறுவனங்கள், நிகழ்ச்சிகள், மாணவர்கள், இதர பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. இதன்காரணமாகவே பலரும் ஹார்வர்டில் படிக்க விரும்புகின்றனர். ஏராளமான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுவதால், மிகப்பெரிய அளவில் செலவாகும் என்ற கவலைப்படத் தேவையில்லை.அட்மிஷன் நடைமுறைகள்: ஒவ்வொரு துறையிலும் மாணவர் சேர்க்கை காலம் வெவ்வேறாக இருப்பினும், பெரும்பாலும் டிசம்பரில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஜன., முதல்தேதி விண்ணப்பம் பெற இறுதி நாளாக இருக்கிறது. விண்ணப்பங்கள் பரிசீலிப்பு மற்றும் தேர்வு செய்தல் மார்ச்., ஏப்., மாதங்களில் நடக்கிறது. மே முதல் நாளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டைச் சேர்ந்தவர், உள்நாட்டைச் சேர்ந்தவர் என எவ்விதப் பாகுபாடும் இல்லை. ஒரே மாதிரியான பாடத்திட்டம், கால அட்டவணையே பின்பற்றப்படுகிறது. பள்ளி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதர திறன்களும் கவனிக்கப்படுகின்றன. முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ஆய்வுக்கட்டுரைகள் உள்ளிட்ட கல்விச்சாதனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பல்கலையில் உயர்கல்வி படித்தவர்கள், கல்லுõரியில் சேர்வதற்காக தகுதிப்படுத்தப்படுகின்றனர்.  மொழி வளமையில் இருந்து அனைத்துக்கும் பயிற்சி தரப்படுகிறது. கல்வித்தகுதியும், இதர திறன்களுமே ஹார்வர்டு பல்கலையில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யும். மேலும் விவரங்களுக்கு http://www.harvard.edu/ என்ற இணைய பக்கத்தைப் பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்