பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை இல்லையா?
சென்னை: கடும் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு, அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், பல்கலைக் கழகத்திற்கு விடுமுறை அறிவிக்காதது, மாணவர்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த, இரு நாட்களாக தொடர் மழை பெய்ந்து வருகிறது. இதனால், சாலையில் தண்ணீர் குளம் தேங்கி நிற்கிறது. தொடர் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நேற்று தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து, இன்றும் (12ம் தேதி) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பல்கலைக்கழகத்தில் பதிவாளரே, விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் படைத்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில், முந்தைய காலங்களில், தொடர் மழை பெய்தால், அனைத்து வளாகத்திலும், விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.