இஸ்ரோவுக்கு அமைதிக்கான விருது
புதுடில்லி: இந்திரா காந்தி சர்வதேச அமைதி மற்றும் ஆயுத ஒழிப்பு மேம்பாட்டுக்கான விருது, இந்தாண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, இஸ்ரோவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, விருது குழு தலைவரான துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, வெளியிட்டுள்ள அறிவிப்பு: செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வெற்றிகரமாக ஈடுபட்டது, விண்வெளியை அமைதிக்காக பயன்படுத்துவதில், சர்வதேச நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது போன்ற, இஸ்ரோவின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.