தனியார் பள்ளியில் சோதனை
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்துார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், அந்த பள்ளியில் சோதனை நடத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்துார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், வாக்காளர்களுக்கு வழங்க, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஜோதிராதித்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, பள்ளி வளாகத்தை தேர்தல் பறக்கும் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சோதனையிட்டனர். எனினும், பணம் எதுவும் சிக்கவில்லை.