ரேங்க் பெறாத திருவண்ணாமலை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில, ரேங்க் பட்டியலில், 285 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், மூன்றாம் இடம் பெற்ற, 230 பேரில், வட மாவட்டங்களில், சென்னை உட்பட, ஆறு மாவட்டங்களில், 25 பேர், 497 மதிப்பெண் பெற்றனர். சென்னையில், ஒரே ஒரு மாணவி மட்டும், மூன்றாம் இடம் பெற்றார். திருவள்ளூர் மாவட்டத்தில், வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த, எட்டு மாணவ, மாணவியர், மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒருவர் கூட மாநில ரேங்க் பெறவில்லை. வேலுார் மாவட்டத்தில், நான்கு பேர், மாநில அளவில், மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தில், 86.49 சதவீதத்துடன் வேலுார் மாவட்டம் இறுதி இடத்தை பெற்றுள்ளது. பிளஸ் 2 தேர்விலும்,இந்த மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில், 83.13 சதவீதத்துடன் இறுதி இடத்தை தான் பெற்றது. பின்தங்கிய நாகைடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே, மூன்றாம் இட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களிலும், நாகை மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில், ஒரு மாணவி மட்டுமே இடம் பெற்றுள்ளார். தேர்ச்சி சதவீதத்திலும் நாகை மாவட்டம், 89.43 சதவீதம் பெற்று, 27ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.கோலோச்சும் கொங்குபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், கடந்த, ஐந்து ஆண்டுகளாக கொங்கு மண்டல பள்ளிகள் தொடர்ந்து மாநில, ரேங்க் பெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் பிளஸ் 2 மட்டுமின்றி, 10ம் வகுப்பு தேர்விலும் நாமக்கல், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த அதிக மாணவர்கள், மாநில அளவில், மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 29; கோவையில், 23; ஈரோட்டில், 13 பேர், 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தத்தில், 84 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். மத்திய மாவட்டங்களில்மத்திய மாவட்டங்களான, திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில், 23 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளிகளை சேர்ந்த, 23 பேர் அடக்கம். திருச்சி மாவட்டத்தில் சாதித்த, ஆறு பேரில், ஐந்து பேர் துறையூரை சேர்ந்தவர்கள். தென் மாவட்டங்களில்மூன்றாம் இடம் பெற்ற, 230 பேரில், 29 பேர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதில், மதுரை மாவட்ட தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர், 10 பேர், மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.