மாணவியர் விடுதிகளில் கேமரா
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நடத்தப்படும், 502 மாணவியர் விடுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், 37 மாவட்டங்களில், 502 மாணவியர் விடுதிகள் நடத்த படுகின்றன. அவற்றில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, அரசு முடிவு செய்து உள்ளது. விடுதிக்கு, ஐந்து கேமரா என, மொத்தம், 2,510 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவற்றை பொருத்தி பராமரிக்க, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், &'டெண்டர்&' கோரப்பட்டுள்ளது.