உள்ளூர் செய்திகள்

கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தாதீர்!

தமிழகத்தில் இந்தாண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. அதில் இடங்களை பெற்ற மாணவர்களிடம் கட்டணம் பெற, மருத்துவ கல்லுாரிகள் கடுமை காட்டாக்கூடாது என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.இது குறித்து, அரசு மற்றும் சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளுக்கு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில், மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையை, முதல்வர் பழனிசாமி., அறிவித்துள்ளார்.எனவே, கல்லுாரிகளில் சேர வரும் மாணவர்களிடம், கல்வி கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என, கட்டாயப்படுத்த கூடாது.கல்வி கட்டணம் செலுத்தாவிட்டாலும், மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின், சேர்க்கை ஆணை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்