உள்ளூர் செய்திகள்

சுயசார்பு கல்வியே சிறந்தது!

முனைவர் கமல.செல்வராஜ், அருமனை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, &'இ - மெயில்&' கடிதம்: நம் நாட்டில், 34 ஆண்டுகளுக்குப் பின், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், &'இஸ்ரோ&' முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன் தலைமையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த, 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, மத்திய அரசு அதற்கான பணியைத் துவங்கியது. அக்குழுவினர், நம் நாட்டில் பெரும் நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை பல்வேறு தரப்பட்ட, 2.50 லட்சம் பேரிடம் கருத்துகளைச் சேகரித்தனர். அதன் பின், அவற்றை கொள்கை முன்வரைவாகத் தயார் செய்து, நாட்டு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கு முன்வைத்தனர்.அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு முழு வடிவில் தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு.இதை, தமிழகம் தவிர, பிற மாநிலங்கள் அனைத்தும் எவ்வித ஆட்சேபனையுமின்றி ஏற்றுக் கொண்டன.&'ஹிந்தி திணிப்பு நடக்கிறது; குலத் தொழிலுக்கு அச்சாரம் போடப்படுகிறது&' என, தமிழகத்தில் மட்டும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.வரும் கல்வியாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, அனைத்து மாநிலக் கல்வி அதிகாரிகளின் கூட்டத்தை, சில தினங்களுக்கு முன், மத்திய அரசு கூட்டியது. இதில், அனைத்து மாநிலக் கல்வி அதிகாரிகளும் பங்கேற்றனர். ஆனால், தமிழகக் கல்வி அதிகாரிகளை, அக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல், தமிழக அரசு தடுத்துள்ளது.மேலும், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது.இது எவ்வகையிலும் நியாயமானதல்ல. ஏனென்றால், இக்கல்விக் கொள்கையில், 3 வயது முதல், 6 வயது வரை அனைத்து மாணவர்களுக்கும், கட்டணமில்லா அடிப்படை கல்வி வழங்கப்படும்.தொடக்கப் பள்ளி வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை, மதியம் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் கடைப்பிடிக்கப்படும். நடுநிலைப் பள்ளியிலிருந்து, மாணவரின் திறமைக்கு ஏற்ற தொழிற்கல்வி கற்பிக்கப்படும். நாடு முழுதும் மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும். இதில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் உட்பட, 10 பிராந்திய மொழிகள் உட்படுத்தப்பட்டுள்ளன. விரும்பும் மொழியை கற்கலாம். இவற்றுடன், விரும்பினால் ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியைக் கூடக்கற்கலாம். இப்படி எண்ணற்ற நல்ல திட்டங்கள், இந்த தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன. இக்கல்விக் கொள்கைக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. தமிழகத்திலும், இக்கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, மாணவர்களின் எதிர்காலக் கல்வியை, சுயசார்பு கல்வியாக மாற்ற, மத்திய அரசுடன் ஒத்துழைப்பதே விவேகமாகும்.இப்போது இல்லை என்றால்...ஆர்.-நுாருல்லா, சென்னையிலிருந்து அனுப்பிய, &'இ - மெயில்&' கடிதம்: ஆட்சியின் தலைமைக்கு வேண்டியவராக, ஒரு ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ்., அதிகாரி நெருக்கம் பெற்று விட்டால் போதும்... அவரின் பின்னால், மற்ற சக அலுவலர்கள் அணி திரள துவங்கி விடுவர். இக்குழுவினர், &'பசை&'யான துறைகளை பெற்று, வளமான வசதிகளை வளைத்துக் கொள்வர். ஆளுங்கட்சியின் அதிகார வர்க்கத்து நிராகரிப்புகளால் அபலையாக்கப்படும், சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு, &'தண்ணி இல்லா காடு&' தான்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., ஆட்சிக் காலத்தில், அசோக் வரதன் ஷெட்டி என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, முதல்வரின் நேரடி நெருக்கத்தில் இருந்தார். எனவே தலைமைச் செயலகத்தில் கொடிகட்டி பறந்தார். அவரை சுற்றி வந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், வாய்ப்புகளை வாரிச் சுருட்டிக் கொண்டனர். கடந்த 2011ல் ஆட்சி மாறி, அ.தி.மு.க., பொறுப்புக்கு வந்ததும், தலைமைச் செயலகத்தில் இருந்த அசோக் வரதன் ஷெட்டி, சேலம் மாநகரில் உள்ள, &'சேகோசர்&' நிறுவன &'மேனேஜிங் டைரக்டர்&' பதவிக்கு துாக்கி அடிக்கப்பட்டார்.&'என் குடும்ப நிலை கருதி, சென்னையில் ஏதேனும் ஒரு பதவியில் அமர்த்துங்கள்...&' என, அவர் வேண்டியும், எந்த பலனும் இல்லை. சேகோசர் நிறுவன பதவியில் அமர்ந்த அசோக் வரதன் ஷெட்டிக்கு, நான்கு &'ரேங்க்&' கீழே உள்ள சிவில் சர்வீஸ் அதிகாரியை, &'பாஸ்&' எனும் தகுதியில் அமர்த்தி, அவரை அவமதித்தனர். இன்று, தலைமைச் செயலராக இருக்கும் இறையன்பு, கடந்த ஆட்சியில், சாதாரண பேராசிரியர் போல் அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் இருந்தார் அல்லவா? ஆளுங்கட்சியினருக்கு வேண்டாதவர்களுக்கு என்றே, &'தண்ணி தெளித்து&' விடப்பட்ட துறைகள், 100க்கும் மேல் உள்ளன.தகுதியும், திறமையும் உடைய அதிகாரிகளை, &'டம்மி&' துறைக்கு துாக்கி அடிப்பதால், ஆளுங்கட்சியினருக்கு அரிப்பு வேண்டுமானால் தீர்க்கப்படலாம். ஆனால், அந்த அதிகாரியின் உழைப்பு, திறமை, அனுபவம் போன்றவற்றை வீணடிக்கலாமா? இது தேசிய இழப்பன்றோ!இதற்கு ஒரு தீர்வு உண்டு. அதிகாரம் இல்லாத சாதாரண துறைகள் அனைத்தையும், அதனதன் தொடர்பு துறைகளில் ஒன்றிணைத்துவிட வேண்டும்.அது, பெரிய துறையின் ஒரு பிரிவு அலுவலகமாகவே மாறிவிடும். அதற்கு, கீழ்நிலை அதிகாரிகளே போதும். உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த அலுவலகங்கள் இயங்கும்.இதன் மூலமாக, எல்லா துறைகளுமே வலுவானவையாக, அதிகாரிகளின் ஆர்வத்தை ஈர்க்கக் கூடியவையாக மாறிவிடும். உயர் அதிகாரிகள் இடையே, எந்த வித, &'ஈகோ&'வும் தலைதுாக்காது. அதன் வழியாக, அரசு பணி எதுவும் பாதிக்கப்படாது.தலைமைச் செயலர் இறையன்பு, நேர்மையும், நிர்வாக திறனும் உடையவர். அவரால், எத்தனையோ சீர்திருத்தங்களை செய்ய முடியும். அதற்கு, தமிழக அரசின் தலைமை ஆளுமை அனுசரணையாக இருக்க வேண்டும். இப்போது கூட நிர்வாக சீர்திருத்தம் நிகழவில்லை எனில் பின் எப்போது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்