பள்ளியை குறிவைப்பது ஏன்?
சென்னை: &'&'குற்றம் செய்தவரை விட்டு விட்டு பள்ளியை குறி வைப்பது ஏன்?&'&' என நடிகர் விஷாலுக்கு, பா.ஜ., நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் &'போக்சோ&' சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து நடிகர் விஷால், &'இந்த விஷயம் என்னை பயமுறுத்துகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்&' என &'டுவிட்டரில்&' பதிவிட்டார்.அதற்கு கண்டனம் தெரிவித்து, காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி:பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில் நான் முன்வந்து நிற்பேன். எனக்கும் அந்த பள்ளிக்கும் எந்த உறவும் இல்லை. நான் கேட்பதெல்லாம், குறிப்பிட்ட நபரின் குற்றச் செயல்களுக்கு அப்பள்ளியை முன்னிறுத்துவது ஏன்? விஷாலின் பதிவில், குற்றவாளியின் பெயரை விட்டு விட்டு அப்பள்ளியின் பெயரை மட்டும் பதிவிடுகிறார். அவர் மட்டுமல்ல, பலரும் அப்பள்ளியையே குறி வைக்கின்றனர். இது, குறிப்பிட்ட நபர் மீதான புகார் என்பதையும் தாண்டி, ஒரு சமூகத்தை முடக்கப் பார்க்கும் செயலாகவே தெரிகிறது.இதுபோன்ற நடவடிக்கை, அப்பள்ளியில் பயில்வோர் மற்றும் பணியாற்றுவோரின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். திரையுலகில் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால், அதற்காக சினிமாவையே, விஷால் முடக்கி விடுவாரா? முதலில் விஷால், சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து, தடுக்க வேண்டும். சினிமாவில் பெண்கள் உதவி நாடி வந்தபோது, அங்கு விஷால் &'ஹிரோயிசம்&' காட்டியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.