உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.சர்வதேச, தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற ஆண், பெண்களில் தலா 2 வீரர்களுக்கு, தலா 2 பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.ஒரு லட்சம், தங்கப்பதக்கம் வழங்கப்படும். விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களை சமர்பிக்க வேண்டும். இதுதவிர போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், நிர்வாகி, நன்கொடையாளருக்கும் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.தகுதியான வீரர்கள் தனிநபர் போட்டியில் முதல் 3 இடங்களிலும், குழு போட்டியில் முதல், 2ம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். www.sdat.tn.gov.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உறையின் மேல், &'முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்&' என எழுதி, &'முதன்மை செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-600003&' முகவரிக்கு ஜூலை 15 க்குள் அனுப்பலாம். விவரங்களுக்கு 0451-2461162 ல் பேசலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்