திண்டுக்கல் அணி அபாரம்
திண்டுக்கல்: பள்ளி மாணவியருக்கான முதல்வர் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில், திண்டுக்கல் அணி வெற்றி.பள்ளி மாணவியருக்கான முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இறுதி போட்டியில், திண்டுக்கல், கன்னியாகுமரி அணிகள் மோதின. முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி, 10 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 99 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கன்னியாகுமரி அணி 10 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது. இறுதி போட்டியில், 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 7.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. சிறந்த வீராங்கனையாக 50 ரன்களுடன், ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய விஸ்வாஸ்ரீநிதிக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கன்னியாகுமரி அணி வெள்ளி பதக்கத்தையும், திருவள்ளூர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.