பயிர் மேலாண்மை பயிற்சி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தில் சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி முகாம் நெடுமதுரையில் நடந்தது.வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் பொருளியல் பேராசிரியர் பாலாஜி, சிறுதானிய சாகுபடி முறைகள், மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பயிர் காப்பீட்டுத் திட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மயில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுரை கூறினார்.வேளாண் உதவி அலுவலர் செல்வகுமார், தோட்டக்கலை உதவி அலுவலர் ஆறுமுகம் மானியத்திட்டங்கள் குறித்து விளக்கினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.