உள்ளூர் செய்திகள்

வயல்வெளி பள்ளி பயிற்சி

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் வட்டார வேளாண் துறை சார்பில் பரளியில் திருந்திய நெல் சாகுபடி பயிர் மேலாண்மை முறை குறித்து உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடந்தது.இதில் நெல் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி பேராசிரியர் தெய்வசிகாமணி நெல் ரகம், பருவநிலை, விதை நேர்த்தி, நாற்றங்கால் தயாரித்தல் தொழில் நுட்பம் குறித்தும், வேளாண் அலுவலர் வசந்தகுமார் மானிய இடுபொருட்கள், திட்டங்கள் குறித்தும், உதவி வேளாண் அலுவலர் விக்னேஷ் பயிர் காப்பீடு குறித்தும் விளக்கினர். ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப அலுவலர்கள் வேல்முருகன், சவுந்தர்ராஜன், வசந்தி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்