உள்ளூர் செய்திகள்

திருக்குறள் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்: திருக்குறள் முற்றோதல் போட்டி ஆண்டுகள் தோறும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்படுகிறது. இப்போட்டியில் 1330 குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.10ஆயிரம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.2023-24 ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் 1330 குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஏற்கனவே இப்போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க இயலாது.இதற்கான விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ,இணையதளத்திலோ (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்யலாம்.நவ.30ற்குள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு 0451-2-461585 என்ற எண்ணில் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்