உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி.,யில் தொழில்நுட்ப கண்காட்சி

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த புதிய கண்டுபிடிப்புக்கான தொழில்நுட்ப கண்காட்சியில், மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள், படிக்கும் போதே அறிவியல் திறனை வளர்க்கும் வகையில், கல்லுாரி வளாகத்தில் புதிய கண்டுபிடிப்புக்கான மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில், மாணவர்களின் புதிய சிந்தனைகளுக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள, ஐ.ஐ.டி., மற்றும் தொழில் துறையினர் சார்பில், தேவையான உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி, ஐ.ஐ.டி., மையத்தில் கண்டுபிடித்த புதிய பொருட்களை, மாணவர்கள் காட்சிப்படுத்தும் கண்காட்சி, நேற்று முன்தினம் நடந்தது.அதில், 73 வகையான கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். தொழில் துறையினர் அவற்றை பார்வையிட்டு, அதன் பயன்பாடுகளை அறிந்தனர். இதில், சூரிய சக்தியில் இயங்கும் பந்தய கார், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட், ராணுவ கண்காணிப்புக்கான ஆளில்லா பறக்கும் வாகனம், மார்ஸ் ரோவர் என்ற செவ்வாய் கோளுக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சியின் மாதிரி வாகனம், தானியங்கி கார் போன்றவை அடங்கும்.கண்காட்சி குறித்து, புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு பிரிவு பேராசிரியர் ராஜகோபால் கூறுகையில், ஐ.ஐ.டி.,யின் ஆராய்ச்சி மையம் நடத்தும் தொழில்நுட்ப கண்காட்சி, மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதாகவும், அவர்களின் திறனை பெருமைப்படுத்துவதாகவும் உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்