உள்ளூர் செய்திகள்

புதுமை விரும்பும் மாணவர்கள்

மாணவர்கள் பெரிய நிறுவனத்தில் அதிக ஊதியத்துடன் கூடிய வேலையை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கும் இன்றைய காலக் கட்டத்தில் இதிலிருந்து மாறுபட்ட மாணவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இடைக்கால பயிற்சிக்காக பெரிய நிறுவனங்களில் சேரவே மாணவர்கள் விரும்புவார்கள். இதன்மூலம் நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும் என்பதே பெரும்பாலான மாணவர் களின் எண்ணமாக இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஐ.ஐ.எம்., ஆமதாபாத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழிகாட்டுதலில் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கும் "புரா' திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இந்த திட்டம் ஊரக பகுதிகளை மேம்படுத்த பெரிதும் உதவியாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். மற்றொரு ஐ.ஐ.எம்., மாணவர் இந்திய பார்லிமென்ட்டில் செயல்படுத்தப் பட்டுவரும் நிர்வாகம் மற்றும் கொள்கைகளை பயில களமிறங்கியுள்ளார். இதுதவிர சில மாணவர்கள் மீடியா துறையில் சேர்ந்துள்ளனர். ஐ.ஐ.எம்., கோழிக்கோட்டில் படிக்கும் மாணவர்களோ மருத்துவம் மற்றும் விளையாட்டு துறையின் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்