உள்ளூர் செய்திகள்

ஐ.எஸ்.ஆர்.ஓ., காலியிடங்களுக்குகான அறிவிப்பு

ஐ.எஸ்.ஆர்.ஓ., எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாட்டிலைட் தொழில் நுட்பம் மூலம் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் இதர உபயோகங்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த நிறுவனத்தில் சயிண்டிஸ்டு/இன்ஜினியரிங் பிரிவுகளில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் இன்ஜினியரிங் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க 28.02.2011 அன்று அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. விபரங்களறிய இணைய தளத்தைப்பார்க்கவும். கல்வித் தகுதிஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் குறைந்த பட்சம் 65 மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவை. இந்த ஆண்டு இறுதித் தேர்வு எழுத உள்ளவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி முறைவிண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டும் முதலில் ஒரு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு 16.04.2011 அன்று தமிழ் நாட்டில் சென்னை, கேரளாவின் திருவனந்தபுரம், கர்னாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட மையங்களில் நடத்தப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். இதிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பதவி வழங்கப்படும். இணைய தள முகவரி: "http://www.isro.org/scripts/job.aspx"


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்