ஏ.ஐ.பி.இ. முடிவுகள் வெளியிடப்படும்
கடந்த 6 ம் தேதி நடைபெற்ற அகில இந்திய பார் கவுன்சில் தேர்வை(ஏ.ஐ.பி.இ) எழுதியவர்களுக்கான மதிப்பெண் விவரங்களை பி.சி.ஐ. வெளியிடும். டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த இந்திய பார் கவுன்சில், தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அந்த விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. தேர்வு முடிவுகளை பி.சி.ஐ. வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 6 ம் தேதி தேர்வு நடைபெற்றாலும் குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் அதை எழுதவில்லை. அதனைத் தொடர்ந்து சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. அதேசமயம் இந்த தேர்வை மார்ச் 6 ம் தேதி நாடு முழுவதும் 27 நகரங்களில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். நாட்டிலேயே முதன்முறையாக வழக்கறிஞராக பயிற்சி பெறுவதற்கான இதுபோன்ற பொது நுழைவுத்தேர்வு இப்போது நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.