சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு நோட்டீஸ்
மே 1ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்திய நுழைவுத் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் வெளியானதற்குக் காரணம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மே 1ஆம் தேதி நடந்த நுழைவுத் தேர்வில் தரவிருந்த கேள்வித் தாள்கள் வெளியானதைத் தொடர்ந்து சில மையங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. சில மையங்களில் தேர்வு நேரம் மாற்றப்பட்டது. மாற்றி அமைக்கப்பட்ட தேர்வு நேரமும், ராணுவ மருத்துவக் கல்லூரியின் தேர்வு நேரமும் ஒன்றாக இருந்ததால் பல மாணவர்கள், இத்தேர்வினை எழுதாமல் சென்றுவிட்டனர். தேர்வு நடைபெறாத மையங்களில் மே 11ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எல்லா மாணவர்களையும் மறு தேர்விற்கு அனுமதிக்குமாறு பொது நல மனு ஒன்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது குறித்து விளக்கம் கேட்டு சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.