உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கஷாயம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரவுவதை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நிலவேம்பு கஷாயம் கடந்த ஒரு வாரமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதி திரு.வி.க.,அரசு மேல்நிலை பள்ளி, சி.எம்.எஸ்., மேல்நிலை பள்ளி உட்பட நகரின் பல பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் நல்ல தண்ணீரை தேக்கி வைப்பதை தடுக்கவும், அபேட் மருந்து ஊற்றும் பணியில் 200க்கு அதிகமான நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் தவிட்டுராஜன், “50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்