உள்ளூர் செய்திகள்

பாரதி வித்யாலயா 100 சதவீத தேர்ச்சி

திருப்பூர்: கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம், இரண்டாமிடம் பெற்றுள்ளது; தொடர்ந்து, ஒன்பதாவது ஆண்டாக, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி அபிராமி அன்பரசு, 1190 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார். அர்ச்சனா, 1,188 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம்; நிவேதா, 1,176 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றுள்ளார். கணிதத்தில், நான்கு பேர்; வேதியியலில் மூன்று பேர்; உயிரியலில் ஒரு மாணவி, சென்டம் பெற்றனர். 1,150 மதிப்பெண்களுக்கு மேல், 10 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், பள்ளியில், மாணவியருக்கு பிரத்யேக விடுதி வசதி உள்ளது. அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள், எளிய முறையில் பாடம் கற்பிக்கின்றனர்; மாணவர்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, பாடம் கற்பிக்கப்படுகிறது. தற்போது, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு, 04285 224 996, 224 397, 98427 14459 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்