உள்ளூர் செய்திகள்

இ.சி.இ. பிரிவில் 10,802 மாணவர்கள் சேர்ந்தனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜுலை 8ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், மற்ற பாடங்களை விட எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடத்தில்தான் அதிகமான மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். ஜுலை 25ம் தேதி இறுதியில் 10,802 மாணவர்கள் இ.சி.இ. பிரிவை தேர்வு செய்துள்ளனர். இதில் 3311 பேர் மாணவர்களும், 7491 பேர் மாணவிகளும் ஆவர். அடுத்தபடியாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (7851) பிரிவும், மூன்றாவதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (6907) பிரிவும் உள்ளது. குறைந்தபட்ச மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவாக ஆட்டோமோபைல் இன்ஜினியரிங்கும், அடுத்ததாக பயோ டெக்னாலஜியும் உள்ளன. ஆட்டோமொபைலை 331 மாணவர்களும், பயோ டெக்னாலஜி பிரிவை 458 மாணவர்களும் தேர்வு செய்துள்ளனர். தமிழ் மீடியப் படிப்புகளான சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தலா 62 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்