மாவட்ட கலைத்திருவிழா 1,167 மாணவர்கள் பங்கேற்பு
உடுமலை: திருப்பூரில் நடந்த மாவட்ட கலைத்திருவிழாவில் அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 1,167 மாணவ, மாணவியர் ஆர்வமாக பங்கேற்றனர்.பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் , இந்த விழா நடந்தது. நஞ்சப்பா பள்ளியில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டியை தலைமை ஆசிரியர் கர்னல் துவக்கி வைத்தார்.ஒன்று, இரண்டாம் வகுப்பை ச் சேர்ந்த, 171 குழந்தைகள் தமிழ், ஆங்கில மழலையர் பாடல் ஒப்புவித்தல், கதை கூறுதல், களிமண் பொம்மை செய்தல், நாட்டுப்புற நடன குழு, மாறுவேடம், வண்ணம் தீட்டுதல் என தங்கள் திறமையை காட்டினர்.மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 376 பேர் பங்கேற்றனர். ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்புவித்தல், பரத நாட்டியம் தனி மற்றும் குழு, பாவனை நடிப்பு, பேச்சு, மாறுவேடம் என போட்டிகள் களைகட்டின.ஜெய்வாபாய் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 610 பேர் பங்கேற்றனர். களிமண் சிற்பம், குழு நாடகம், செதுக்கு சிற்பம், செவ்வியல் இசை, பல்குரல் பேச்சு, மணல் சிற்பம், ரங்கோலி, வில்லுப்பாட்டு என பல பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்தினர்.இந்த விழாவில் அதிக ஆர்வம் நாட்டுப்புற நடனத்தில் இருந்தது. ஒன்று, இரண்டாம் வகுப்பில், 59 பேரும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பில், 110 பேரும், ஆறு முதல் எட்டாம் வகுப்பில், 107 பேரும் நாட்டுப்புற நடனத்தில் மட்டும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.