உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்தா?

கோவை: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் வலம் வரும் அறிவிப்பில் உண்மையில்லை என, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனை, மாநில வாரியாக பெறப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் குழு அமைத்து, பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆலோசனைகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மதிப்பெண்கள் வழங்குவது குறித்து, வாரியம் முடிவு செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விருப்பம் இல்லாதவர்கள், வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றறிக்கையை, தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர், கடந்த 24ம் தேதி வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் இச்சுற்றறிக்கையால், மாணவர்கள் மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கோயமுத்துார் சகோதயா பள்ளிகள் சங்க தலைவர் நவமணியிடம் கேட்டபோது, &'&' இச்சுற்றறிக்கையில் உண்மையில்லை. சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது பள்ளி நிர்வாகிகளுக்கோ, எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை, மாணவர்கள் நம்ப வேண்டாம். எந்த தகவலாக இருந்தாலும், உரிய பள்ளிகள் மூலம், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்,&'&' என்றார். கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளி தரப்பிலும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்