உள்ளூர் செய்திகள்

இரட்டை காப்பியங்களுக்கு ரூ.2 கோடி

*தமிழின் இரட்டை காப்பியங்கள் எனப்படும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய நுால்களை, 25 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்*பன்னாட்டு புத்தகக் காட்சியில், 40 நாடுகளைச் சேர்ந்த 75 பதிப்பாளர்கள் பங்கேற்றனர். இதில், தமிழில் இருந்து 483 நுால்கள், பிற மொழிகளில் இருந்து 269 நுால்கள் என மொத்தம், 752 நுால்களை மொழிபெயர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன*கடந்த இரண்டு ஆண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நுால்களை, உலகின் 100 பல்கலைகளில் வைக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்*கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் பிரிவுகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 நுால்களை, பள்ளிக்கல்வி துறை மொழி பெயர்த்து வெளியிடும்*தமிழில் இயந்திரவழி கற்றல், செயற்கை நுண்ணறிவு, இயற்கைமொழி செயலாக்கம், பெருந்திரள் மொழி மாதிரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்*தமிழகத்தில் உள்ள அரிய நுால்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்து, மின்பதிப்பு நுாலாக மாற்ற, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்*பழங்குடியின மக்களின் மொழிகளின் ஒலி வடிவங்களையும், சவுராஷ்டிரா மொழியையும், இனவரைவியல் முறையில் ஆவணப்படுத்தி பாதுகாக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.உரிமைத்தொகைக்கு நிதி*ஏற்கனவே, 1.15 கோடி மகளிருக்கு உரிமைத்தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், இந்த ஆண்டுக்கான தொகையாக 13,720 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது*மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்துக்காக, 3,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.புதுமை பெண் திட்டம் விரிவாக்கம்*அரசு பள்ளிகளில் படித்து, கல்லுாரிகளில் சேரும் மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், புதுமைப்பெண் திட்டத்தில் இருந்து வழங்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவியருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, 370 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.காலை உணவு திட்டம் விஸ்தரிப்பு*அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு காலை உணவு திட்டத்தின் வாயிலாக உணவு வழங்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல், இத்திட்டம், ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது*குழந்தைகள் மையங்களை, வாடகை கட்டடங்களில் இருந்து சொந்த கட்டடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில், 500 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட, 3,123 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.சுய உதவி குழு கடன்*இந்த ஆண்டில் 10,000 புதிய சுய உதவி குழுக்களை உருவாக்க, 35,000 கோடி ரூபாய் வரை வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது*திருவண்ணாமலை, ஓசூர், சென்னையில் மூன்று தோழி மகளிர் விடுதிகள் கட்டப்படும் நிலையில், அடுத்தாண்டில் கோவை, மதுரை, சென்னையில் மேலும் மூன்று விடுதிகளை கட்ட, 26 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.திருநங்கையருக்கு இலவச கல்வி*மூன்றாம் பாலினத்தவர்கள் உயர் கல்வியை தொடர விரும்பினால், அவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்களை அரசு ஏற்கும். இதற்காக, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்*அரசு கூர்நோக்கு இல்லம், சிறப்பு இல்லம், பாதுகாப்பு இல்லம் ஆகியவை இணைக்கப்பட்டு சமூக பாதுகாப்பு துறையாக செயல்பட்டது. இனி அது, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றப்படும்*கோவையில் குழந்தைகளுக்கான திறன் பயிற்சி கூட வசதியுடன், பூஞ்சோலை என்ற மாதிரி இல்லம் உருவாக்க, 7,830 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக் அகாடமி*தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் வெற்றியாளர்களை உருவாக்க சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமி நிறுவப்படும்*ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில், 440 கோடி ரூபாயில், தமிழக ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்படும். இதன் வாயிலாக, கடல்சார் நீர் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிறப்படைவர்.ஆட்டிசம் பாதிப்பு சிகிச்சை*ஆட்டிசம் எனும் மன இறுக்கம் பாதிப்பு உடையோருக்கு இயன்முறை பயிற்சி, பேச்சு, சிறப்பு கல்வி, தொழில் பயிற்சி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், சென்னையில், 25 கோடி ரூபாய் செலவில் உயர்திறன் மையம் அமைக்கப்படும்.அகழாய்வுக்கு ரூ.5 கோடி*இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய எட்டு இடங்களில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்*கேரள மாநிலம் முசிறி என்ற பட்டணம், ஒடிசா மாநிலம் பாலுார், ஆந்திர மாநிலம் வெங்கி, கர்நாடக மாநிலம் மஸ்கி ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்யப்படும். இவற்றுக்காக, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்*தேசிய கடல்சார் தொழில் நுட்பவியல் நிறுவனம், இந்திய கடல்சார் பல்கலை ஆகிய வற்றுடன் இணைந்து கொற்கை, அழகன்குளம் ஆகிய பகுதிகளில், 65 லட்சம் ரூபாய் செலவில் முன்கள ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து ஆழ்கடல் ஆய்வும் செய்யப்படும்.திறந்தவெளி அருங்காட்சியகம்*கீழடி அகழாய்வு தளத்தில், திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம், 17 கோடி ரூபாயில் அமைக்கப்படும்*பழந்தமிழர்களின் தொன்மை, இடப்பெயர்வு, வேளாண்மை, பண்பாட்டு நடைமுறைகளை நவீன மரபணுவியல் வாயிலாகவும், மதுரை காமராஜர் பல்கலையின் தொல்மரபணுவியல் ஆய்வகத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்த, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்