உள்ளூர் செய்திகள்

கிண்டியில் வரும் 22ல் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம், வரும் 22ம் தேதி நடக்க உள்ளதாக, சென்னை கலெக்டர் பொறுப்பு வகிக்கும் கீதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 22ல் நடத்தப்பட உள்ளன.இந்த முகாம், கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10:00 முதல் 2:00 மணி வரை நடக்கிறது.எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்துள்ளோர், முகாமில் பங்கேற்கலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், தங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. பங்கேற்க கட்டணம் கிடையாது.பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்