இம்மாத இறுதிக்குள் 4,500 ஆசிரியர்கள் நியமனம்?
அரசு பள்ளிகளில் 4,500 பட்டதாரி ஆசிரியர்களை, இம்மாத இறுதிக்குள் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த நவம்பரில் நடந்தது. இதில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஜனவரியில் நியமன ஆணை வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அருந்ததியினர் இட ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்பட்டது. சிலர் வழக்கு தொடர்ந்தனர். சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், இப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்த அரசு, அதற்கான முயற்சிகளை எடுத்தது. இதன்படி, வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “சான்று சரிபார்ப்பு பணி உட்பட அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. பிப்ரவரி இறுதியில் நியமன உத்தரவு வழங்கப்படும்,” என்றார்.