சி.ஓ.ஏ., தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
கோவை: தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ், பிப்., மாதம் நடக்கவுள்ள சி.ஓ.ஏ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேசன் (சி.ஓ.ஏ.,) விண்ணப்பிக்க டிச., 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, அப்பகுதிகளில் இணையவழி சேவைகள் தடங்கல் ஏற்பட்டதால், விண்ணப்பிக்க அவகாசம் கேட்டு தேர்வர்கள் பலர் கோரிக்கை முன்வைத்தனர்.அதன்படி, 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை, திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை, https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.