காலியாக உள்ள 51 சுயநிதி எம்.பி.பி.எஸ். இடங்கள்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் நடைபெறும் மூன்றாம் கட்ட கலந்தாய்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு கடந்த ஜுலை மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பல் மருத்துவ இடங்கள், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டன. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு இடம் கிடைக்காமல் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 466 ஆக இருந்தது. இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெற்ற மாணவர்கள் 51 பேர், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவில்லை. இதனால் ஏற்பட்ட காலியிடங்களும், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கும் 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. காலியிடங்களை அறிந்து கொள்ள http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=3475&cat=8 பார்க்கவும். செப்டம்பர் 2ம் தேதி, ஏற்கனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், அவர்கள் விரும்பினால் வேறு சுயநிதி மருத்துவக் கல்லூரியில் மறு ஒதுக்கீடு பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 3ம் தேதி காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.