உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு 6,000 மையங்கள் அமைப்பு

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எளிமையாக நடத்த, கர்நாடக உயர் கல்வி தேர்வாணையம் தயாராகி வருகிறது. 6,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.கர்நாடக உயர் கல்வி தேர்வாணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டு தோறும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்காக, 3,000 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நடப்பாண்டு கொரோனா விதிமுறைகளின்படி, 6,000க்கும் அதிகமான தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.முன்னேற்பாடுஜூலை மூன்றாம் வாரம், தேர்வு நடக்கும். அறிவியல், கணிதம், சமூக அறிவியல் தேர்வு, ஒரே நாளில் நடக்கும்.மூன்று, நான்கு நாட்கள் இடைவெளியில், மொழி தேர்வு நடக்கும். இரண்டு தேர்வுகளும், தலா 120 மதிப்பெண் கொண்டதாக இருக்கும்.கொரோனா குறைவதால், தேர்வுக்கு தயாராகும்படி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், மாவட்ட அளவில் முன்னேற்பாடுகள் நடக்கிறது.இம்முறை 8.40 லட்சத்துக்கும் அதிகமான மாணவர், மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர்.கொரோனா இருப்பதால், சமூக விலகலை பின் பற்றும் வகையில், ஒரு டெஸ்க்கில் ஒரு மாணவர் வீதம், ஆறு அடி இடைவெளியில், டெஸ்க் வசதி செய்யப்படுகிறது. ஒரு தேர்வறையில், 10 முதல் 12 மாணவர்கள் அமரும் வசதி செய்யப்படுகிறது. எனவே கூடுதல் மையங்கள் அமைக்கப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில், தேர்வை நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. தேர்வுக்காக கிராம, நகரப்பகுதியில் தொடக்கப்பள்ளி, பி.யு., கல்லுாரி, பட்டப்படிப்பு கல்லுாரிகளின் கட்டடம் பயன்படுத்தப்படும். 6,000 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள், திறக்க வேண்டியுள்ளதால், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் விதிமுறையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்