உள்ளூர் செய்திகள்

மனிதநேய மாணவர்கள் 78 பேர் யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி

சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., நடத்திய முதல்நிலை எழுத்து தேர்வில், சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற 78 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., மே 24ம் தேதி, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுகளை நடத்தியது.அதற்கான முடிவுகள் நேற்று வெளியான நிலையில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின், 'மனிதநேய அறக் கட்டளை' இலவச பயிற்சி மையத்தில் 55 மாணவர்கள், 23 மாணவியர் என, மொத்தம் 78 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.தற்போது, தமிழகத்தில் இருந்து முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன், இலவச பயிற்சி வகுப்பு, தேர்வுகள், வல்லுநர்களின் ஆலோசனைகளை வழங்கவும், இந்த அறக்கட்டளை முன் வந்துள்ளது.இதில் பங்கேற்க விரும்புவோர், தங்களின் புகைப்படம் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டுடன், இன்று முதல் மனிதநேய மையத்தை நேரடியாகவோ அல்லது 'www.mntfreeias.com' என்ற இணையத்தின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.அதேபோல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 'குரூப் 1' தேர்வில், மனிதநேய அறக்கட்டளையில் படித்த 36 பேர், தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.இது குறித்து சைதை துரைசாமி அறிக்கை:பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, தகுதியும் திறமையும் உள்ள மாணவர்களுக்கு, மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம், 20 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது.இதில் 5,500க்கும் மேற்பட்டோர் உயர் பதவிகளிலும், 44,000க்கும் மேற்பட்டோர் அடிப்படை பதவிகளிலும் உள்ளனர்.இந்நிலையில், கடந்தாண்டு மூன்று கட்டங்களாக நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில், எங்கள் மையத்தில் படித்த 36 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்