உள்ளூர் செய்திகள்

திறந்தநிலை பல்கலையின் 8வது பட்டமளிப்பு விழா

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், எட்டாவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு அரங்கில், இன்று காலை 11:30 மணிக்கு விழா நடக்கிறது. கவர்னர் ரோசய்யா, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில், 3,655 பேர் முதுகலை பட்டம்; 8,601 பேர் இளங்கலை பட்டம்; 2,762 பேர் டிப்ளமோ சான்றிதழ்; 73 பேர் முதுகலை டிப்ளமோ பெற உள்ளனர். இவர்களில், 138 பேருக்கு முதலிடத்துக்கான தங்க பதக்கம் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்