உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் 87 ஆயிரம் மாணவர்

திருப்பூர்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், 87 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தயாராக உள்ளனர்.பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் காத்திருந்த பொதுத்தேர்வு அட்டவணை நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது. பிளஸ் 2 செய்முறைத்தேர்வு, பிப்., 12ம் தேதியும், பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முறையே, பிப்., 19 மற்றும் பிப்., 23ம் தேதி துவங்குகிறது.பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை பிளஸ் 2வுக்கு, மார்ச், 1ல், பிளஸ் 1க்கு மார்ச், 4ல், பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 26ல் தேர்வுகள் துவங்குகிறது. மார்ச் கடைசி வாரத்துடன் பொதுத்தேர்வு நடைமுறைகள் நிறைவு பெறுகிறது.பத்தாம்வகுப்பு, மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 33 ஆயிரத்து, 445 மாணவ, மாணவியரும், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 28 ஆயிரம், 376, பிளஸ் 2 பொதுத்தேர்வை, 25 ஆயிரத்து 688 மாணவ, மாணவியர் என மொத்தம், 87 ஆயிரத்து 509 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுத தயாராக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்