உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (27ம் தேதி) காலை பத்து மணியளவில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி பதிவுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்ச்சி, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. தனியார் துறையில், இம்முகாம் மூலம் பணியமர்த்தப்படுவதால் வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, இம்மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் மற்றும் வேலையளிப்போர்கள், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்