பல்கலையாகிறது என்.சி.இ.ஆர்.டி.,
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் அல்லது கல்வி மையம் என்ற அந்தஸ்தை பெற உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம். அப்போது தான், ஆசிரியர்கள் மற்றும் மேம்பட்ட பயிற்சித் திட்டங்களுக்கு பட்டங்கள் வழங்கும் அதிகாரம், இந்த கவுன்சிலுக்கு கிடைக்கும்.முன்னதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், நாட்டின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு, கல்வி அமைப்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார்.அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:தற்போது, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு பட்டமளிக்கும் அதிகாரம் இல்லை.இந்நிறுவனத்தின் ஐந்து மண்டல கல்வி மையங்கள், டில்லி, அஜ்மீர், போபால், புவனேஸ்வர் மற்றும் மைசூரு ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.இவை, ஆசிரியர் பயிற்சியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றன.இந்த பட்டங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மையங்கள் உள்ளூரில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.எனவே தான், தற்போது கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு, பல்கலைக் கழகம் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி மையம் என்ற அங்கீகாரம் பெற திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.