உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் கலந்துரையாடல்

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் பொங்கல் நாளன்று புதுச்சேரியில் சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருணாச்சல பிரதேச மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று உப்பளம் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தங்களது கல்லூரிகளில் படிப்பு மற்றும் அங்குள்ள உணவு முறைகள் குறித்து கலந்துரையாடினர். பின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்