தாமரை பிரதர்ஸ்
ஆசிரியர்: வரலொட்டி ரெங்கசாமிபக்கம்: 284, விலை: ரூ.400கள்ளக்காதல் சம்பந்தப்பட்ட ஒரு கொலை வழக்கில், சாகும்வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட செல்வியின் கதை. அவளை எப்படியாவது அந்த நரகத்திலிருந்து மீட்க வேண்டும் என துடிக்கிறார் சிறை அதிகாரி சிவானந்தம். செல்வி - ஹரியின் துாய காதல், அதை வேரறுக்கும் சாதி பிரச்னை, மதுவால் அழியும் குடும்பங்கள் உள்ளிட்டவை குறித்து, வலுவான வார்த்தைகளால் மிளிர வைத்திருக்கிறார் ஆசிரியர். பல நல்ல மனங்கள், போட்டி போட்டுக்கொண்டு செல்விக்கு ஆதரவு தரும் ஒரு அழகான கதை.வெந்து தணிந்தது காடுமகா பெரியவா ( பாகம் - 14 )ஆசிரியர்: பி.சுவாமிநாதன்பக்கம்: 276, விலை: ரூ.400மகா பெரியவர், தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.ரயிலில் பயணிக்க இருந்தவரை தடுத்து நிறுத்தி விபத்திலிருந்து காப்பாற்றிய அதிசயம், திருப்பதி கோவில் அர்த்த மண்டபத்தில் இரு வாசல்கள் திறக்க வேண்டும் என்ற தேவஸ்வம் போர்டின் கருத்துக்கு அந்த மாநில முதல்வர் மூலம் தீர்வு கண்டது, நோய் வந்தால் அதைக் கண்டு கலங்காமல் அது கொடுக்கும் சிரமத்தை எப்படி புரிந்து கொள்வது என, ஏராளமான வழிகாட்டல்கள் நுாலில் உள்ளன.