குரூப் 1 மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு!
தேனி: செப்., 2 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்விற்கான மாதிரித்தேர்வு செப்., 5ல் நடக்கிறது.இந்த மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்ப நகல், புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பித்தோர் மாதிரி தேர்வில் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.