உள்ளூர் செய்திகள்

வரும் 13ம் தேதி மாநில அளவிலான செஸ் இறுதிப் போட்டி

சென்னை: பள்ளி மாணவ, மாணவியரிடையே, மாநில அளவிலான, செஸ் இறுதிப் போட்டி, வரும் 13ம் தேதி, சென்னையில் நடக்கிறது. கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் நினைவுத்திறனை வளர்க்கும் வகையில், செஸ் போட்டி நடத்தப்படுகிறது. ஏற்கனவே, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மண்டலம் என பல நிலைகளில், போட்டி நடந்தது. இதையடுத்து, மாநில அளவிலான இறுதிப் போட்டி, வரும் 13ம் தேதி, சென்னை, வேப்பேரியில் உள்ள டவுட்டன் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான 360 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, மறுநாள் 14ம் தேதி, சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் குழந்தைகள் தின விழாவில் பரிசு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்