உள்ளூர் செய்திகள்

மே 16 முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வியடந்த அல்லது வருகை புரியாத மாணவர்கள் துணைத் தேர்வெழுத மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஜூலை மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1 துணைதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள தனித்தேர்வர்கள மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத மாணவர்கள் மே 16ம் தேதி காலை 11 மணி முதல் ஜூன் 1ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.ஏற்கனவே பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, இதரக் கட்டணம் ரூ. 35 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். முதல் முறையாக தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.150, இதரக் கட்டணம் ரூ. 35 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை சேவை மையம்/பள்ளியிலேயே செலுத்த வேண்டும்.மே 16 முதல் ஜூன் 1 வரையிலான தேதியில் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் உரிய கட்டணத்துடன் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்