பிளஸ் 2 திருப்புதல் தேர்வு; கிராம மாணவர்கள் தவிப்பு
சிவகங்கை: &'வாட்ஸ் ஆப்&' மூலம் பிளஸ் 2 திருப்புதல் தேர்விற்கு விடை அளிக்க முடியாமல் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு தேர்வின்றி 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்தது. ஆனால், பிளஸ் 2 மாணவர்கள், நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எழுத உள்ளதால், அவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என கல்வி அமைச்சர் தெரிவித்து வருகிறார். கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் பிளஸ் 2 மாணவர்கள் தடையின்றி தேர்வுக்கு தயாராகும் விதத்தில், அலைபேசி &'வாட்ஸ்ஆப்&' மூலம் திருப்புதல் தேர்வினை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, தேர்வன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணிக்குள் தேர்வினை எழுதி, அவற்றை &'பிடிஎப்.,&' பைல் ஆக ஆசிரியர்களின் அலைபேசிக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்ப வேண்டும்.இது வரை பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கான திருப்புதல் தேர்வு முடிந்துள்ளது. மே 28 வரை அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளது. இத்திருப்புதல் தேர்வில் விடைகளை எழுதி, பிடிஎப்., பைல் ஆக ஆசிரியர்களின் அலைபேசி &'வாட்ஸ் ஆப்&'- க்கு அனுப்புவதில், கிராமப்புற மாணவர்கள் தவிக்கின்றனர். கிராமப்புறங்களில் &'நெட்&' வசதி அதிகளவில் கிடைக்காததால், உரிய நேரத்தில் ஆசிரியர்களுக்கு விடைத்தாளை அனுப்ப முடிய வில்லை என புலம்புகின்றனர்.ஆசிரியர்கள் புலம்பல்:திருப்புதல் தேர்வினை ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக எழுதி அனுப்பாமல், குழுவாக அமர்ந்து விடைகளை எழுதி அனுப்புகின்றனர். அதில், கிராமப்புற மாணவர்கள் &'நெட்&' கிடைக்கவில்லை எனக்கூறி, தேர்வு தாளை இரவு 9:30 மணிக்கு தான் அனுப்புகிறார். இது போன்று காலதாமதமாக வரும் விடைத்தாள்களை எப்படி திருத்துவது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.