சி.பி.எஸ்.இ.,பிளஸ் 2 தேர்வு முடிவு; சென்னை மாணவர் 3வது இடம்
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முவுகள் இன்று காலை 11.30 மணிக்கு இணையதளத்தில் வெளியானது. இதில், சென்னை கே.கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி யைச் சேர்ந்த மாணவன் அஜிஸ் சேகர் 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.நாடு முழுவதும் 10,67, 900 பேரும், தமிழகத்தில் 13, 814 பேரும் தேர்வு எழுதினர். மொத்தம் 94 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 92 % , மாணவர்கள் 91 % பேர் தேர்ச்சி பெற்றனர். மார்ச்1 முதல் ஏப்ரல் 22 ம் தேதி வரை இந்த தேர்வு நடந்தது. கோவையில் 2 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.cbseresults.in, www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.