பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடந்தது. ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மார்ச் 23ம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கி வேகமாக நடந்து முடிந்தன. மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்துப் பணிகளும் நடந்து முடிந்தன. இந்நிலையில், இன்று காலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவ, மாணவியர் இணையதளங்களிலும், பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை பார்த்து கொண்டுள்ளனர். மாணவ, மாணவியர் தினமலர் http://results.dinamalar.com/ இணையதளத்தில் முடிவுகளைக் காணலாம்.