உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி

கோவை: தமிழக பாடத்திட்டத்திற்கு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவதில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில், வழிகாட்டி நெறிமுறையை விரைவில் வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கீடு செய்வதற்கான முறை குறித்து, இறுதிகட்ட பணிகள் நடப்பதால், விரைவில் வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தியிருப்பதால், அம்மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பள்ளி அளவிலான மதிப்பீட்டு குழுவில், வேறு பள்ளி ஆசிரியர்களும் இடம்பெறுவதால், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.எஸ்.இ., போல, தமிழக பாடத்திட்டம் பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 2 சிலபஸ் அடிப்படையில் தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. எனவே, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே இறுதி செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே, மதிப்பீட்டு முறைக்கான வழிகாட்டி நெறிமுறை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.அரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், &'தற்போது பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள், கடந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். கடைசி தேர்வு மட்டும் எழுதாததால், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. ஆனால், கடந்தாண்டு தோல்வியை தழுவியோரும், தற்போது பிளஸ் 2 தொடருகின்றனர். இவர்களுக்கு, பிளஸ் 2 ஆல்பாஸ் அறிவித்தாலும், பிளஸ் 1ல் தோல்வி அடைந்த பாடங்களுக்கு, மறு தேர்வு எழுத வேண்டிய, சூழல் உள்ளது. இதுபோன்ற குளறுபடிகளுக்கு, தீர்வளிக்கும் வகையில், மதிப்பீட்டு குழு வழிகாட்டி நெறிமுறை வெளியிட வேண்டும்&' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்