உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கல்வித்துறை சுறுசுறுப்பு

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகளில், மாவட்ட கல்வித்துறை சுறுசுறுப்பாகியுள்ளது.மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 688 மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர். தேர்வுக்கு இன்னமும், பத்து நாட்கள் மட்டுமே உள்ளதால், பொதுத்தேர்வுக்கான பணிகளை மாவட்ட கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், முதல்கட்ட ஆலோசனை நடந்து முடிந்துள்ளது. பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ள துறை அலுவலர், முதன்மை கண்காணிப்பாளர், தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.பொதுத்தேர்வு நடக்கவுள்ள மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமிக்க கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வழங்கியுள்ளது. சென்னையில் இருந்து நடப்பு வாரத்துக்குள் முதன்மை காலி விடைத்தாள் கட்டுகள், பொதுத்தேர்வு வினாத்தாள் வர உள்ளது.ஓரிரு நாளில் விடைத்தாள் தயாரிப்பு பணி துவங்க உள்ளது. தனித்தனியே இரு பள்ளிகளில், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களை இருப்பில் வைக்க, சுழற்சி முறையில் அலுவலர்களுக்கு கண்காணிப்பு பணி ஒதுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்