பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 85.9%
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் விகிதம் 85.9% ஆக உள்ளது. வழக்கம் போல மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 82.3% தேர்ச்சி பெற்றுள்ளனர். 89% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை (85.2%) விட இந்த ஆண்டு (85.9%) தேர்ச்சி விழுக்காடு மிகக் குறைந்த அளவே உயர்ந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 200/200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்பியலில் 646 பேர் 200/2000 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியியலில் 1243 பேரும், உயிரியலில் 615 பேரும், தாவரவியலில் 14 பேரும், கம்ப்யூட்டர் சயின்சில் 223 பேரும், வணிகவியலில் 1167 பேரும், கணிதவியலில் 1320 பேரும், வணிகக் கணிதத்தில் 358 பேரும் 200/200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கணிதத்தில் 2720 மாணவ, மாணவியர் 200/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். விலங்கியலில் ஒருவர் கூட 200/200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. மேலும், 60 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை (392,747) விட இந்த ஆண்டு 4,18,846 பேர் 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.